பலத்த நீரோட்டத்தில் சிக்கிய 45 பேர் தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்பு

கோத்தா கினாபாலு:

நேற்று மதியம் கோத்தா மருடு, ஜாலான் டான்டெக் கம்போங் லோங்கோப் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் மீன்பிடித்தும் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஏற்பட்ட நீர் பெருக்கில் சிக்கிய 7 குழந்தைக்கள் உட்பட 45 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சபா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கோத்தா மருடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மாலை 4.11 மணியளவில் கிடைத்த அழைப்பிணைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“அக்குழுவில் 23 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் அடங்குவர் என்றும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை கயிறுகள் மற்றும் ஏணிகளைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மீட்பு நடவடிக்கை மாலை 6.47 மணிக்கு முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here