பிபிஆர் வளாகத்தில் ஆடவர் கொலை

கோலாலம்பூர்: தாமான் இந்தான் பைதுரி  பிபிஆர் குடியிருப்பில்  ஒருவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

21 வயதான மரணமடைந்த அவ்வாடவர் ஆரம்பத்தில் ஒரு நண்பருடன் அக்குடியிருப்புக்கு புதன்கிழமை (நவம்பர் 25) காலை 8 மணியளவில் கூடாரம் அமைக்க வந்ததாக செந்தூல் ஓசிபிடி உதவி ஆணையர்  பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணையில், அந்த நபர் உணவு வாங்குவதற்காக பிபிஆர் அடுக்குமாடியின் மற்றொரு பிளாக்குக்கு சென்றது தெரியவந்தது. அச்சமயம் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர் சம்பவ இடத்தில்  பாதிக்கப்பட்டவரை  வெட்டினார்  என்று புதன்கிழமை சம்பவ இடத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

அவரது உடல் ஒரு வழிப்போக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார். பிபிஆரில் வசிக்கும் 25 வயது இளைஞர் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி பெஹ் தெரிவித்தார்.

நாங்கள் தாக்குதலுக்கான நோக்கத்தையும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தையும் மீட்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி பெஹ் தெரிவித்தார். இக்கொலை சம்பவம் குறித்து விவரம் அறிந்தவர்கள் முன்வந்து தகவலை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here