விவசாயிகள் பேரணி: கோரிக்கையை நிராகரித்த டில்லி அரசு

டில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி கோரிய டில்லி காவல்துறையின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் டில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், டில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டில்லியை ஹரியானாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகள் மீது டில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி,  டில்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், விவசாயிகள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி டில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் தில்லி காவல்துறை டில்லியில் உள்ள 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த மாநில அரசிடம் அனுமதி கோரியது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு 9 மைதானங்களைத் தற்காலிக சிறைகளாக மாற்ற அனுமதி கோரிய டில்லி காவல்துறையின் கோரிக்கையை டில்லி அரசு நிராகரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here