மராடோனா இறப்புக்கு மருத்துவர் காரணமா? குடும்பம் ஐயம்!

போகோட்டா:

கால்பந்து ஜாம்பவான் மராடோனா மறைவுக்குப்பின்  மனிதக் கொலைக்காக மருத்துவர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருவதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

மராடோனா மாரடைப்பால் தலைநகர் புவெனஸ் அயரஸின் புறநகரில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

மராடோனாவின் மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் உள்ளதா என்பதைக் கண்டறியும் முயற்சியில், ஞாயிற்றுக்கிழமை காலை லியோபோல்டோ லூக்கின் வீடு,  கிளினிக்கில் போலீசார் சோதனை நடத்தினர் என்று பல உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

இப்பதிவுகளை லூக் மறுக்கிறார்.

யாருடைய தரப்பிலும் மருத்துவ பிழை இல்லை. டியாகோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஒரு நோயாளியின் நிலையில், அதுபோன்று இறப்பது உலகில் மிகவும் பொதுவான விஷயம். அந்த நிகழ்வைத் தடுக்க சாத்தியமான அனைத்தும் செய்யப்பட்டன, என லூக் தனது வீட்டில் ,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

மராடோனா நவம்பர் மாத தொடக்கத்தில் மூளை ரத்த உறைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையை விட்டு வெளியேற லுக் அனுமதித்திருந்தார். தன்னால் முடிந்த அனைத்தையும், சாத்தியமற்றது வரை செய்ததாக லூக் கூறினார்.

அவர்கள் அவருடைய மருத்துவ வரலாற்றையும் நான் செய்த சோதனைகளையும் எடுத்துகொண்டார்கள் என்று லூக் தெரிவித்தார்

டியாகோ இறந்தபோது, ​​நான் அவருடைய இடத்திற்கு வந்தேன், வழக்கறிஞரின் அலுவலகத்தினர் ஏற்கெனவே  அங்கு இருந்தனர். சாட்சியமளிக்க அவர்கள் என்னை அழைத்துச் செல்லவில்லை. 

மராடோனாவின் குடும்ப உறுப்பினர்கள் மராடோனாவிற்கும் அவரது தனிப்பட்ட மருத்துவருக்கும் இடையில் ஒரு சண்டையைக் கண்டதாக புலனாய்வாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, இந்தப் புகார் எழுந்துள்ளது. தனது நோயாளியுடன் அந்த வகையான சந்திப்புகள் இயல்பானவையே என்று லூக் கூறினார்.

நான் டியாகோவுக்கு விளக்கியபோது பல முறை அவர் என்னை நிராகரித்திருக்கிறார். பின்னர் அவர் என்னை திரும்ப அழைப்பார்.

மராடோனாவின் மகள்கள் டால்மா, கியானினா ஆகியோர் தங்கள் தந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் விசாரணை கோரப்பட்டது என்றார் லூக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here