பணமோசடியில் சிக்கிய வழக்கறிஞர்

 

ஷாஆலம், 1 டிசம்பர்-

வழக்கறிஞர் பி. நாகராஜன் (52)  என்பவர்  பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார். நிதிசேமிப்பு மேம்பாட்டுத் திறன் அமைப்பின்
மோசடியில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடியில் சிக்காமலிருக்க அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக பதிவாகியுள்ளது.

இப்பணமோசடி தொடர்பான சந்திப்பு கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு பொது இடங்களில் நடந்தேறியது அம்பலமாகியுள்ளது.
நீதிபதி ரோஸிலா முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட பி. நாகராஜன் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளார்.

குற்றம் உறுதிசெய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை, அபராதம் , பிரபம்படி விதிக்கப்படும்.

ஊழல் தடுப்பு ஆணைய குற்றவியல் பிரிவு துணை இயக்குநர் ஸான்டர் லிம் வாய் கியொங் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் வெ.50,000 , ஒருவர் ஜாமீன் தொகையுடன் கையொப்பமிட்டு, அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சமுதாயத்தால் மதிக்கதக்க ஒரு தொழில் புரிபவராவார். அவரது இத்தகைய செயல் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்வதாக அவர் கூறினார்.

வழக்கறிஞர் விக்ரமன் ராஜு ஜாமீன் தொகையை 20,000 வெள்ளியாகக் குறைக்க விண்ணப்பித்தார். கோவிட் -19 தொற்றின் காரணத்தால் அவரது வழக்கு நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவரித்தார்.

நீதிமன்றம் ஜாமீன் செலுத்த 22 ஜனவரி 2021 அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் 73,000 வெள்ளி ஊழல் மோசடி குற்றசாட்டு, வழக்கறிஞர் பி. நாகராஜன் மீது பதிவாகியுள்ளது. மீண்டும் நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here