கோத்தா திங்கி:
நேற்று, பத்து லயர் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்டவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து ஏறக்குறைய 1 கிமீ தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது,” என்று திங்களன்று வெளிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தா திங்கி வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து லயர் கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மற்றுமொருவர் காணாமல் போனதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
முஹமட் சியாஹ்மி ஜம்ஜாம், 26, மற்றும் ஹக்கிம் அப்துல் ரஹீம் லீ, 20, ஆகியோர் காலை 9.30 மணியளவில் காணாமல் போவதற்கு முன்பு வெறித்தனமாக கடலில் நீந்திக்கொண்டும் கை அசைத்தும் காணப்பட்டனர்.
நேற்று மாலை 3.15 மணியளவில் அவர் காணாமல் போன இடத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள கடற்கரையில் சியாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















