எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார்” : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா 2  ஆவது அலை வீசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக்கொண்டாடிய முதல்வர் பழனிசாமி, “ஒரு மதத்தை மட்டும் நேசித்து மற்ற மதத்தை தவறாகப் பேசுபவன் நான் அல்லன்.

முதல்வர் பதவி மீது ஆசை இருக்கலாம் ஆனால், வெறி இருக்கக்கூடாது . எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசு நாதர் பார்த்துக் கொள்வார்.

தமிழகத்தில் கொரோனா 2 ஆவது அலை வீசிவிடக் கூடாது. அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திமுக பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. பொங்கல் பரிசு அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர் ” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here