பிரிட்டனில் இருந்து திரும்பிய 29 பேரில் ஒருவர் மாயம்!

விருதுநகர் மாவட்டத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய ஒருவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தையும் ஆட்டிவைக்கிறது. ஏனென்றால் சீனா கற்றுக்கொடுத்த பாடத்தை யாரும் மறக்கவில்லை. எங்கோ ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று அலட்சியமாக இருக்கவும் முடியவில்லை.

அதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்த நாடான பிரிட்டனில் இருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2,300 பேர் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 1500 பேரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு 29 பேர் பிரிட்டனில் இருந்து திரும்பினர். ஆனால், அவர்களில் 28 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளார்.

அவரை காவல்துறையினருடன் சேர்ந்து சுகாதாரத் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதே போல் மதுரையிலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here