குனோங் ரப்பாட்  தமிழ்ப்பள்ளிக்கு புதி  பரிணாமம்

ஈப்போ-

இவ்வாட்டாரத்தில் உள்ள குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி  புதிய இடத்தில் புதிய பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக இவ்வட்டார மக்களின் கனவாக இருந்த இப்பள்ளி, புதிய தோற்றத்தில் நனவாகியிருக்கிறது என்று இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு.சிவாஜி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இப்புதிய கட்டடம் புதிய பொலிவுடன் திகழும் அதே வேளையில்  5, 6 வயதடைய பாலர்ப்பள்ளி மாணவர்களின் பதிவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் முதலாம் ஆண்டிற்கான மாண்வர்களும் காலம் தாழ்த்தாமல் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழும் தமிழ்ப்பள்ளிகளும் காக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இவ்வட்டாரத்தில் வசிக்கும் இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  இப்பள்ளியில் பதிவி செய்யுமாறு  அவர் வலியுறுத்தினார்.

ஆரம்பக் கல்வி தாய்மொழியில் அமைந்தால்தான்  இனமும் இனப்பண்புகளும் வழி வழியாய்த் தொடரும்.  

தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

நமது அலட்சியத்தால் இருப்பதை இழந்துவிடக்கூடாது. இழந்துவிட்டால் மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியமாகிவிடும்.

எதையும் வருமுன் காத்தல் வேண்டும்  என்பதை நினைவில் கொண்டு,  பாலர் பள்ளிக்கும் முதலாம் வகுப்பிறகும் மாணவர்களைப் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் சிவாஜி கிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here