சென்னையில் உயர் ரக போதை மருந்து புழக்கம்! 3 பேர் கைது!!

சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 80 ஆயிரம் மதிப்புடைய போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பகுதிகளுக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் இருந்து போதைப் பொருள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய மூன்று பேரை மயிலாப்பூர் நடேசன் சாலை சந்திப்பு வழியாக வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர் .

விசாரணையில் அவர்களிடம் விலையுயர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . பின்னர் இவர்களிடம் விசாரிக்கும் போது குருவியாக செயல்பட்டு வரக்கூடிய திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (36), சிசிடிவி டிசைனரான சித்திக் அகமத் (33) , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் ஜிலானி (19)  என்பது தெரியவந்தது .

மேலும் இவர்கள் இளையான்குடி பகுதியிலிருந்து போதைப்பொருட்களை சென்னை கொண்டு வந்து சென்னையில் அமைந்துள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் ,  தனியார் விடுதிகளில் தங்கி உள்ளவர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .

இதைத்தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது கைது செய்து அவரிடமிருந்து 80 ஆயிரம் மதிப்புடைய 65 கிராம் போதைப்பொருட்கள் , போதைப்பொருட்கள் , எடை மெஷின் , 3 செல்போனை  பறிமுதல் செய்தனர் .

மேலும் இந்த போதைப் பொருள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

newstm.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here