நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது. எதிர்ப்பு தெரிவிக்கும் மகள்!

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து துல்லியமான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி அவரின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு அவரைக் கௌரவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 23 ஆம் தேதியை பராக்கிரம நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேதாஜிக்கு இப்போது பாரத ரத்னா விருதுகள் வழங்கவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அவரின் மகள் அனிதா போஸ் ‘இது மிகவும் தாமதமான ஒன்று. பாரத ரத்னா விருதுகள் வழங்க ஆரம்பிக்கப்பட்ட போதே இதை செய்திருக்க வேண்டும்.

அவருக்குப் பின்னர் வந்த பலருக்கு அந்த விருதை கொடுத்துவிட்ட நிலையில் இப்போது வழங்குவது மிகவும் தாமதமானது’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here