இன்று விடுதலை ஆகிறார் சசிகலா… உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவந்த சசிகலாவின் தண்டனைகாலம் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 10 மணிக்கு விடுதலையாகிறார். மருத்துவர்கள் மூலம் கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை சான்றிதழ் வழங்குகின்றனர்.

மூச்சு திணறல் காரணமாக கடந்த 20 ஆம் தேதி பெங்களூரு சிவாஜிநகர் போவ்ரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 21ஆம் தேதி பெங்களூரு கலாசிபால்யாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும், 21ஆம் தேதி இரவு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா நோயளிகள் சிகிச்சை பெறும் கட்டடத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு 6ஆவது தளம் முழுவதும் சசிகலாவிற்கு ஒதுக்கப்பட்டது.

மொத்தம் 12 கண்காணிப்பு கேமராக்கல் பொருத்தப்பட்டு அதில் 4 கேமராக்கள் சசிகலாவை மட்டும் கண்காணிப்படும் வகையில் அமைக்கப்பட்டு, சசிகலாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை முழுவதும் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 8 ஆவது நாளாக சிகிச்சை பொற்றுவரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகிறது. கொரோனா தொற்றுடன் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்பப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா அறிகுறிகள் முழுமையாக நீங்கிவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

தொடர்ந்து சர்கரை நோய்க்கான இன்சுலின் வழங்கப்பட்டுவரும் நிலைநில் மாஸ்க் வழியாக இடைவிட்டு விட்டு 2லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கப்படது. இந்நிலையில், அவருக்கு செயற்கை ஆக்சிஜன் இன்றி இயல்பாக சுவாசிக்கும் அளவில் முன்னேற்றம் அடைந்ததாக நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றுடன் சசிகலாவின் தண்டைகாலம் முடிவடைவதால், அவர் மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலை செய்யப்படுகிறார். விடுதலைக்கு பிறகும் சசிகலாவிற்கு சிகிச்சை தொடரும் என்பதால் காலை 9 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு வரும் சிறை அதிகாரிகள் மருத்துவர்கள் மூலம் கோப்புகளில் கையெப்பம் பெற்று விடுதலை பெற்றதற்கான சான்றிதழ் வழங்குகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here