ஃபெப்ஸி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு

தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவராக, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘ஃபெப்ஸி என்றழைக்கப்படும்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 8021-9023  ஆம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ நடைபெற்றது.

இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச்செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.

இவர்களுடன்‌ துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர்‌, எஸ்‌.பி.செந்தில்குமார்‌, வி.தினேஷ்குமார்‌, தவசிராஜ்‌ இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன்‌, ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன்‌, ஜி.செந்தில்குமார்‌, கே.ஸ்ரீபிரியா ஆகியோரும்‌ போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்‌ சங்கத் தலைவர்‌ என்‌.இராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்‌ சங்கத்தின்‌ செயலாளர்‌ ஆர்‌.வி.உதயகுமார்‌, பி.ஆர்‌.ஒ.யூனியன்‌ தலைவர் விஜயமுரளி ஆகியோர்‌ வாழ்த்தினர்‌.

சில தினங்களில்‌ பதவியேற்பு விழா நடைபெற உள்ளது’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here