நன்மை உணரும் நாளே நந்நாள்! அது எந்நாள்?

ஒரு நாட்டின் வெற்றி ஒற்றுமையில் இருக்கிறது.  அப்படியென்றால் அந்நாட்டின் தோல்வி என்பது வேற்றுமையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள ஏழாம் அறிவு தேவையில்லை.

மனிதன் தன் அறிவாற்றாலை 20 விழுக்காட்டைக் கூடத்தாண்டவில்லை என்கிறார்கள் . அதனால் தானோ இன்னும் இனவாதப்போக்குகளில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்!

ஆதாம் ஏவாள்தான் முதல் மனிதப்பிறப்பு  என்று உலகம் நம்புகிறது. இது உண்மையா? பொய்யா என்ற வாதங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. யாரோ சொன்னார்கள். அதை உண்மை என்றுதான் உலகமே இதுகாறும் நம்பிக்கொண்டிருக்கிறது.

அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால்  ஆதாம் ஏவாள் இருந்தார்களா? தோன்றினார்களா? ?அப்படியே இருந்திருந்தால்  அவர்களைப்பற்றித் தெரிந்து வைத்திருந்தவர்கள் யார் என்றெல்லாம் கேள்விகள் பிறந்திருக்குமல்லவா? அப்படி யாரேனும் இருந்ததாகக் குறிப்புகள் இருந்தால் அவர்களும் சம காலத்தவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்?

இப்போது அந்த ஆராய்ச்சியால் எந்தப் பயனில்லை என்பது மட்டும் மிகத்தெளிவான உண்மை. வெற்றுக் கதைகளைக்கூட வெகுவாக நம்பிவிடும் இன்றைய மக்களுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சியடையவே இல்லை என்றால் மிகப்பெரும்பான்மையினர் கோபத்தின் உச்சத்திற்கே போய்விடுவார்கள் என்பது உண்மை.

எவர் சொன்ன சொல்லாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஒரு வார்த்தையின் உணமைப் பொருளைத்தேடும் ஞானம் நம்மிடம் அறவே இல்லை. இதைத்தான் ஆய்வுகள் காட்டுகின்றன. 

 மனிதனுக்கு இருகரங்களின் பயன்பாடு தெரியவில்லை. கொடுத்துதவ மறந்து களவாடத்துணிகிறான். பிறைப்பின் பயன் உணரப்படவில்லை.

மனிதன் தன் அறிவாற்றலில் முப்பதைக் கூடத்தொட முடியவில்லை என்பதே அதற்குச் சான்று. அப்படியே அதன் விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போனால் இந்நேரம் 100 விழுக்காடும் போதவில்லை என்று ஆகியிருக்கும். அவன் கடவுள் ஆகும்போது  நிஜக்கடவுளின் ஆயுள் முடிந்துவிடும். 

கடவுளை நம்புகிறோம். சில வீடுகளில் சாமி படத்தை ஆணியில் மாட்டித்தொங்க விட்டிருப்பார்கள். காணாத கடவுளை நம்பும் மனிதன் படத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும்  ஆணியை நம்பமாடான். அப்படி ஒன்று இருப்பதாக் உணரமாட்டான். இந்த இரண்டில் எது கடவுள் என்று சிந்திப்பதில்லை.

இன்றைய உலக இயக்கமும் அப்படித்தான் இருக்கிறது. வாழவைக்கும் பூமியின் சிறப்பை மறந்து, வாய்ச்சவடால் மனிதர்களின் பேச்சில்தான்     ஊறிக்கிடக்கிறோம் . பூமி வறட்சியில் உருமாறிக்கொண்டிருக்கிறது. இயற்கைச்சுழல் இழிந்துகொண்டிருக்கிறது.

இதுவரை எந்த தெய்வமும் பூமியின் எல்லைக் கோடுகளை வகுத்து ,நிறத்துக்கேற்ப இப்படித்தான் வாழவேண்டும் என்று வகுத்துச் சொன்னதாக அறியப்படவில்லை. ஒவ்வொரு  நிறத்தானும்  அவனவன் வசதிக்கேற்ப நிலத்தை ஆக்கிரமித்தான் , அப்படித்தான் அரங்கேறிக்கொண்ட்டிருக்கிறது. 

இந்த ஆக்கிரமிப்பு எண்ணம்தான் இன்றுவரை மனிதனை சீரழித்துக்கொண்டிருக்கிறது. இந்தாசீரழிவு இன்னும் சிந்தனை வலைக்குள் சிக்காமல் கிடைக்கிறது. மதவாதங்களால் அழிவு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இனவாதங்களால் பிளவு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தும் பொய்த்தூக்கம்  புரளமறுக்கிறது.

இவற்றையெல்லாம் இன்றுவரை மனிதன் சிந்திக்கவே இல்லை . பிளவுகளும் பிரிவினை வாதமும் ஏன் என்பதை ஆராயவே நேரம் இல்லையாம். ஆனாலும் ஆதாம் ஏவாள்தான் முதன்மை மனிதர்கள் என்று பிடிவாதமாகவே இருக்கிறோம். ஆதாம் ஏவாள் உண்மையென்றால் அவர்கல் வழி வந்த மக்கள் ஏன் மாறுபட்ட்டார்கள்? சிண்டுபிடியெல்லாம் எதற்கு?

ஆதாம் ஏவாள் தான்முதன்மை மனிதம் என்றால் நாமெல்லாம் ஒருவழித்தோன்றல்கள்தானே! ஏன் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திக்க இயலவில்லையா? 

அப்படியென்றால் ஆய்வுகள் காட்டுவது உண்மைதான். நம் அறிவாற்றல் இன்னும் முப்பது விழுக்காடைக்கூட நெருங்கவில்லை என்பது உண்மைதானே!

எல்லைகளை வகுத்துக்கொள்வது இன்றைய கடப்பாடு என்றாகிவிட்டது. இந்த விதிகளுக்குட்பட்டுதான் மனிதன் வாழவேன்டும் என்றாகிவிட்டது. அவரவர் எல்லைக்குள் பாதுகாப்பு வேலிகள் போடும் நிலையும் உருவாகிவிட்டது.

வேலிகள் போட்டும்   எருமைகளாய் மீறல்கள் நடக்கின்றன. அடுத்த நிலத்தை அபகரிக்கும் எண்ணமும் அதிக விகாரமாகிவிடுகின்றன. இது எதனால் ஏற்படுகிறது. மனித உயிர்கள் தோன்றுமுன்னே ஆதவனால்  உமிழப்பட்ட துளிதான் பூமி என்று விஞ்ஞானம் கூறுகிறது.  

கண்ணுக்குத் தெரியாமல் பிரளயங்கள் நிகழ்கின்றன. கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் வரைதான் கடவுள் என்பதும் இறைவனுக்கும் தெரியும். அதனால் அவன் வெளிப்படமாட்டான். பூமியின் சுழற்சியைப்போல ஏதோ நடந்தூகொண்டே இருக்கிறது. அப்போது சிந்தித்தால், இறைவன் என்பது யாதென உணரமுடியும்.இவற்றுக்கெல்லாம் குறுக்குவழி வேண்டுமே!

அத்தோடு சரி, அதற்குப்பிறகு மனிதனே இறைவனாகவும் கடவுளாகவும் ஆதிக்கம் செலுத்ததொடங்கிவிடுகிறான். அனைத்தும் நமக்கே என்ற அதிகாரதன்மை உருவாகிவிடும்போது, வகுத்த எல்லைக் கோடுகளைத் தாண்டச்செய்கிறான். 

தாண்டுதல் என்பதுதான் இன்றைய உலக நியதியாகிவிட்டது. தாண்டுதலோடு தீண்டாமை சேர்ந்து கூத்தடிக்கிறது. 

அறிவு வளராதவரை மனிதன் மாறப்போவதில்லை. சிந்திக்காதவரை  சீரழிவிலிருந்து மீளப்போவதில்லை சிறப்புகள் அடையப்போவதில்லை. 

ஆயுதங்களை நம்பியனின் மூளையில் வைரஸ் குடியேறிவிட்டது. அதனால் அவனின் எண்ணம் தீயதைத்தான் நாடும். கிருமி உற்பத்திகல் தொழிலாக உருவெடுக்க்கும் தொழிற்சாலைகள் உருவாகப்போகின்றன.  நிலமெங்கும் கிருமிகளின் ஆதிக்கம் மேலோங்கப்போகிறது. மனிதன் தன்னைத்தானே அழித்துகொள்ளும் காலம் தொடங்கிவிட்டது.

உலகுக்கு ஒரே சூரியன்தான். ஒரே சந்திரன் தான் நிறங்கள் இயற்கையின் படைப்பு .இருள். வெளிச்சம் இல்லாமல் இயறகையும் சுழற்சியும் இல்லை. நிறத்தில் பேதம் பார்த்தால் புதிய வேதங்கள் உருவாகும். அதனால் எல்லைகளைத் தாண்டாமலும் , இனத்தைத் தீண்டாமலும் இருக்க வேண்டும்.

நன்மை,  மட்டுமே மனிதனை அடையாளம் காட்டும். அது எப்போது? அப்போதுதான்…….  

                                                                                   -சிற்பியன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here