இந்த வருடம் வெளியாகும் “துருவ நட்சத்திரம் ! -கௌதம் மேனன்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வெளியீட இயக்குநர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தி உருவாகி வரும் கோப்ரா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்றுவிடுவார்.

இந்த நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆண்டே தொடங்க பட்ட இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

இதனால் மீண்டும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்கி படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வெளியீட இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here