தேசிய ஒற்றுமைக்கு அர்த்தம் புரியுமா?

முப்பது ஆண்டுகளுக்கான தேசிய ஒற்றுமைத் திட்டத்தை அறிவித்த பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், நாட்டின் 8ஆவது பிரதமராகப் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை நடத்தப்பட்டிருக்கும் – பேங்ப்பட்டிருக்கும் இனவாதங்கள் தொடர்பில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது ஏன்?

நடவடிக்கைதான் எடுக்கவில்லை என்றால் நிந்தனைக்குரிய வகையில் இனவாதம் பேசியவர்களை வாய் திறந்து கண்டிக்கவும் இல்லையே, ஏன்?
இதையெல்லாம் விட ்முதலில் நான் மலாய்க்காரர். அப்புறம்தான் நான் மலேசியன்சீ என்பதை மறுத்து முதலில் நான் மலேசியன், அப்புறம்தான் மலாய்க்காரர்சீ என்று இப்போது திருத்திச்  சொல்வாரா?

பதவி அதிகாரத்தில் தம்மைச் சுற்றி இருப்பவர்களுள் பலர் இனவாதிகள் என்ற உண்மையாவது பிரதமருக்குத் தெரியுமா? இனவாதம் பேசி மலேசியர்களை மன ரீதியில் காயப்படுத்தியவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுத்திருப்பதற்கான தடயங்களே இல்லையே!

கெடா மந்திரி பெசார் முகம்மட் சனுசி முகமட் நோர், இந்தியர்களைக் குடிகாரர்கள் என்று மறைமுகமாகத் தாக்கினார். இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டதை தற்காத்துப் பேசினார்.

அவரைத் தண்டிக்க வேண்டும் – கண்டிக்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்தனரே – அப்போதும் பிரதமர் மௌனமாகத்தானே இருந்தார். மக்கள் கெடா மாநில சுல்தானிடம் தங்களின் பிரச்சினையை நேரடியாகக் கொண்டு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதே!

தாம் ஓர் இனவாதி அல்ல என்பதை அதிகாரத்தில் உள்ள இனவாத அரசியல்வாதிகளைக் கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் நிரூபித்திருக்கலாமே! அவ்வாறு ஏதும் செய்யவில்லையே, ஏன்?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் முதலில் நாம் அதனைப் பின்பற்றிக் கடைப்பிடித்தால்தானே அதற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அர்த்தமுள்ளதாகவும் போற்றப்படும்.

தம்முடைய அரசாங்கத்தில் அனைத்து இனங்களுக்கும் சமமான பங்கு அளித்திருப்பதை அவரால் திட்டவட்டமாக உறுதி செய்ய முடியுமா?

மலாய்க்காரர் அல்லாதார் எத்தனை பேர் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றனர்? உருப்படி இல்லாத – செயல் திறன் – ஆக்கத்திறன் இல்லாத அமைச்சர்களைக் கழற்றி விட்டு அந்த இடங்களில் மலாய்க்காரர் அல்லாதவர்களை நிரப்புவாரா?

தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் செயல்படுவது சட்டத்திற்குப் புறம்பானது என்று மலாய் ஆசிரியர்கள் அமைப்பு வழக்குத் தொடுத்திருக்கிறதே…! அதனைக் கண்டித்தாரா அல்லது தாய்மொழிப் பள்ளிகளின் நிலையைத் தற்காத்தாரா?

ஒரு பக்கம் இனவாதம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்க மறுபுறம் தேசிய ஒற்றுமை பற்றி பிரதமர் பேசுகிறார்.

அதே சமயத்தில் இன்று அரசாங்கச் சேவைகளில் எந்த இனம் ஆதிக்கம் செலுத்துகிறது? அதனைச் சரிசெய்து மற்ற இனத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் திட்டங்களை பிரதமர் முன்னெடுப்பாரா?
அரசீ ங்ார்பு நிறுவனங்களில் (ஜிஎல்சி) உயர் பதவிகள் – தலைவர் பொறுப்புகள் நியமனங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ங்ரி ஙெ்ய்வதற்கு பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?

அண்மைக் காலமாக இனம் – சமயம் போன்றவற்றில் கசப்புணர்வும் வெறுப்புணர்வும் ஆழமாகவே விதைக்கப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே பிரதமரின் தேசிய ஒற்றுமைத் திட்டத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கும்.
பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here