விக்கிபீடியாவுக்கு முழுமையான தடை

     –மியான்மர் ராணுவம் தீவிரம்!

மியான்மர் ராணுவம் விக்கிப்பீடியாவின் அனைத்து மொழி பாதிப்புகளையும் மியான்மரில் தடை செய்துள்ளதாக, இணைய பயன்பாடு கண்காணிப்பு சேவையான நெட் பிளாக்ஸை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மியன்மார் விக்கிபீடியா ஆன்லைன் என்சைக்ளோபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் தடுத்துள்ளது. இது இராணுவ ஆட்சிக்குழுவினால் திணிக்கப்பட்ட பரந்த ஆட்சி கவிழ்ப்பு இணைய தணிக்கை ஆட்சியின் ஒரு பகுதியாகும்” என்று நெட் பிளாக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களாக நாட்டில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் நெட் பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.

இணைய தடை இ-காமர்ஸ் நிறுவனங்களை மோசமாக பாதித்துள்ளது. இணைப்பில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய நாட்களில் விற்பனை பாதியாக குறைந்துள்ளதாக இ-காமர்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், வணிகங்களை டிஜிட்டல் தளத்திலிருந்து விலக்கிவிட்டதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி 1’ஆம் தேதி, மியான்மரின் இராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கலைத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பாக ஒரு வருட கால அவசர நிலையை அறிவித்தது.

மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட், தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான பிற உயர் அதிகாரிகளுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆட்சி கவிழ்ப்பு நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டங்களை தூண்டி விட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here