2020 ஆம் ஆண்டு இபிஎஃப்பின் வழக்கமான சேமிப்புக்கு 5.2 விழுக்காடு மற்றும் சிரியா சேமிப்புக்கு 4.9 விழுக்காடு ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. ஓய்வூதிய நிதி, சேமிப்பு இரண்டிற்கும் முறையே 42.88 பில்லியன் மற்றும் 4.76 பில்லியன் என தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2020 ஆம் ஆண்டிற்கான மொத்த செலுதல் தொகை 47.64 பில்லியன் ஆகும். இது இன்று சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஈபிஎஃப் வழக்கமான சேமிப்பு 5.45 விழுக்காடு மற்றும் சிரியா சேமிப்பு 2019 க்கு 5 விழுக்காடு ஈவுத்தொகையை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

























