நடிகை ஸ்ரீப்ரியா, பத்மப்ரியா, சினேகா மோகன்தாஸ், மூகாம்பிகா ரத்னம் உள்ளிட்ட பலரும், மக்கள் நீதி மய்யத்தில், மாநில செயலர் அந்தஸ்தில் உள்ளனர்.
ஸ்ரீப்ரியா அளித்த பேட்டி:
கடந்த சட்டசபை தேர்தலில், பெண்களில், 74 சதவீதத்தினரும்; ஆண்களில், 75 சதவீதத்தினரும் ஓட்டு போட்டுள்ளனர். மக்கள் தொகையில், ஆண்களை விட அதிகம் இருக்கும்போது பெண்கள், ஏன் பின்தங்க வேண்டும்? வரும் தேர்தலில் பெண்கள், 100 சதவீதம் ஓட்டு போட வைத்து, மாற்றத்தை கொண்டு வர வேண்டும். என்ன வேலை இருந்தாலும், அதை அன்று காலையில் அப்படியே விட்டு விட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும்.
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என, குடும்பத்தினருக்கும் வழிகாட்ட வேண்டும்.’எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பதை, பெண்கள் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.
முதல் முறை ஓட்டளிக்கும் இளம்பெண்கள், வீட்டில் உள்ளவர்கள் சொல்படி ஓட்டு போடாமல், சுயமாக சிந்தித்து மாற்றம் கொண்டுவரப் போகும் நம் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும். இவ்வாறு, ஸ்ரீப்ரியா கூறினார்.
அவரது தலைவர் கமல், ”புலியை முறத்தால் அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், ஓட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும்,” என்றார்.