ஜப்பான் திரைப்படம், எங்கு பார்த்தாலும் கண்ணைக்கவரும் Digital LED!

கோலாலம்பூர்

மலேசியாவின் MSK மற்றும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD இணைந்து ஜப்பான் திரைப்படத்தை தீபாவளி பொழுதுபோக்கு மக்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வெளியிடவிருக்கின்றன.

மிகப் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இந்த ஜப்பான் திரைப் படத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வமாகிவிட்டனர். மேலும் நாட்டின் பல பகுதி களில் முக்கியமாக இந்தியர்கள் உள்ள இடங்களி ல் LEDகளில் இந்த திரைப்பட புரொமோஷன்கள் தூள் கிளப்புகின்றன.

வருகிற 10-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கான நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக மையும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. , இந்த படத்தின் டிரைலர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசி கர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வெளியிட்ட சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. மேலும் உலகெங்கும் ரசிகர்களால் அதிகம் எதிர் பார்க்கப்படும் திரைப்படமாக ஜப்பான் இணையதளங் களில் பலமான விமர்சனங்களை அள்ளுகின்றது.

இந்நிலையில் ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கி யுள்ளது.இப்படம் நிச்சயம் மலேசியாவில் மிகப்பெரும் வெற்றிபெறும் என நம்பப் படுகிறது.

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங் களுமே கார்த்திக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.இதையடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. இதனால் ஜப்பான் படமும் மாபெரும் வெற்றியைக் குவிக்கும் என்பது ரசிகர்கள் மேலும் திரைப்படக் குழுவினரின் கணிப்பாக இருக் கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here