இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

இந்தியாவில் வேகமாக குறைந்துவந்த வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,306 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here