-அடுத்து யாருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா?
சென்னை :
நடிகர் சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். குடும்ப – பொழுதுபோக்கு கதை அம்சம் கொண்ட இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
சமீபத்தில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க சூர்யா கமிட் ஆகி உள்ளார். சூர்யாவை சந்தித்த டைரக்டர் வசந்தபாலன் கதை ஒன்றை கூறி உள்ளார்.
அந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போய், உடனே ஓகே சொல்லி விட்டாராம்.இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு சூர்யா – வசந்தபாலன் இணையும் படம் துவங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது வசந்தபாலன், அர்ஜூன் தாஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.





















