மின்னியல் வாசிப்புப் போட்டி

-எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி தங்கம் வென்றது

 

குளுவாங்-

மின்னியல் வாசிப்பு போட்டியில்தேசிய வகை எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவிலேயே முதல் நிலையை எட்டி சாதனை படைத்துள்ளது.

மாணவர்களின் புள்ளிகளின் ஒட்டுமொத்த கணக்கெடுப்பில் தேசிய வகை எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் நிலையை பிடித்துள்ளது.

ஸ்கோலஸடிக் ஆசியா நிறுவனம் ஏற்பாடு செய்த தேசிய அளவிலான மின்னியல் வாசிப்புப் போட்டியில் போட்டியில் எலாய்ஸ் தமிழ்ப்பள்ளி வாகை சூடி பெருமை சேர்த்திருக்கிறது.

இப்போட்டி 14ஆம் தேதி செப்டம்பர் 2020 தொடங்கி 13ஆம் தேதி டிசம்பர் 2020 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளியில் பயிலும்  25 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இப்போட்டி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தியோடு சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களாக உருவாக்கி உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இப்போட்டியில் மாணவர்கள் முதல் நிலை மின்னியல் தேர்வினைச் செய்தனர்.இத்தேர்வின் வழி மாணவர்களுக்கு ஏற்ற மின்னியல் கதைப்புத்தகங்கள் தரத்திற்கேற்ப பிரிக்கப்பட்டன. மாணவர்கள் மின்னியல் கதைப்புத்தகங்களை வாசித்து அதனைப் பின்தொடர்ந்து வரும் புதிர் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

மாணவர்களின் புள்ளிகளின் ஒட்டுமொத்த கணக்கெடுப்பில் தேசிய வகை எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவிலேயே முதல் நிலையை எட்டி சாதனை படைத்துள்ளது.

இவ்வெற்றிக்கு ஆணிவேராய் திகழ்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்ற பெற்றோருக்கும் உதவிக்கரம் நீட்டிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளித்தலைமையாசிரியை திருமதி மணிமேகலை ஆதிமூலத்திற்கும் நன்றி மலர்களைக் காணிக்கையாய் சமர்ப்பிக்கிறோம் என பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் முருகையா செல்லமுத்து தெரிவித்துக் கொண்டார்.

கிருஷ்ணன் ராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here