மேகன் மார்கல் குற்றச்சாட்டு

பதில் அளிக்காத ராணி இரண்டாம் எலிசபெத்

லண்டன்:
பிரிட்டன் கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்தினர் விவகாரம் தற்போது அந்நாட்டு ஊடகங்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.ஹாரி-மேகன் ஆகியோரது பேட்டிக்குப் பிறகு பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் அமைதி காக்கிறார். சமீபத்தில் குழந்தைகளுடன் நடந்த வீடியோ கான்பரன்சிங் பேட்டியிலும் ராணி இரண்டாம் எலிசபெத் இதுகுறித்து கருத்து தெரிவிக்காதது விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.பிரிட்டன் கேம்பிரிட்ஜ் அரசகுடும்பம் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் போரிஸ் ஜான்சன் அரசால் பெரிதும் மதிக்கப்படும் குடும்பம் ஆகும்.
அங்கு இனப்பாகுபாடு கட்டப்பட்டதால் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கல் தனது கணவர் மற்றும் குழந்தை ஆர்ச்சி ஆகியோருடன் பிரிந்து அமெரிக்கா சென்றதாக முன்னதாக அவர்களது பேட்டியில் தெரிவித்து இருந்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹாரியின் சகோதரர் இளவரசர் வில்லியம் அரச குடும்பத்தில் யாரும் இனப்பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறியிருந்தார்.
ராணி இரண்டாம் எலிசபெத் இதுகுறித்து நேரடியாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இளவரசர் பிலிப் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிரிட்டன் தேசிய அறிவியல் வரமாகக் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பள்ளிக் குழந்தைகளிடமும் விஞ்ஞானிகள் இடமும் ராணி இரண்டாம் எலிசபெத் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசினார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு பேர்சேவேரன்ஸ் ரோவர் அனுப்பியது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார். ஆனால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து அவர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ரஷ்யாவின் விண்வெளி வீரர் யூரி காகரின் குறித்து ராணியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் ஓர் அதிசயத்தக்க விண்வெளி வீரர் என்று கூறிய ராணி, மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here