போலீஸ்துறை மக்களின் நண்பன்!

பாதுகாவலர்

கொடியவர்கள் என்று தூற்றாதீர்!

போலீசாரைக் கொடியவர்கள்போல் சித்திரிக்காதீர் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்செரி ஹமீட் பாடோர் கூறியிருக்கிறார். 

பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை இது ஏற்படுத்தி விடுவதாக அமைந்துவிடும் என்ற வருத்தம் அவரின் பேச்சில் தொனிக்கிறது.

இன்றைய  சூழலில் போலீஸ்காரர்கள் மிகப் பெரும்பான்மையினர் கடைமையில் கண்னும் கருத்துமாக இருக்கின்றனர். அதே வேளையில் சிலரின் தவறான போக்கால் போலீஸ் துறைக்கு அவப்பெயர் வந்துவிடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

இப்படி நடப்பது போலீஸ் துறைக்கு மட்டுமல்ல. எந்த்ததுறையை எடுத்துக்கொண்டாலும் அப்படித்தான் இருக்கும் என்பது புதிய பல்லவியல்ல. காலம் கால்ம் அப்படித்தான் இருக்கிறது என்பது போலீஸ் படைத்தலைவருக்கு தெரியாததல்ல.

இதில் ஒன்றைப் புரிந்துகொள்வது பொதுவாகவே நல்லது. எந்தத்துரை என்பது விதிவிலக்கல்ல. மக்கள் விமர்சனம் என்பதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், கொடிய வார்த்தைகள் என்பதில்தான் அதன் தன்மை மாற்றுபடுகிறது .

போலீசார் நடந்துகொள்ளும் விதத்தில், அல்லது தவறாகப்புரிந்து கொள்ளும்போது விபரீதமான வார்த்தை வெளிப்படுகிறது.  பொதுமக்கள் எப்போதுமே நீதியறிந்து  பேசுகின்றவர்களாக இருக்க முடியாது. சூழல்பொறுத்தே வார்த்தககள் அமைந்துவிடும்.

அப்போதுதான் சட்டப்பிரச்சினை தலைதூக்கும். குறிப்பாக ஒன்றைச் சொல்லலாம். அபராதம் என்று வரும்போது போலிஸ் துறைமீதுதான் முதல் எண்ணம் பாயும். பத்தாயிரம் வெள்ளி என்றவுடன் அப்படித்தான் நடந்தது. பொதுமக்கள் இப்பிரச்சினையில் சரியான தகவல்களைப் பெற்றிருக்கவில்லை என்பது  நன்கு புலனாகிறது.

காவல்துறையின் அணுகுமுறை  பொதுமக்களோடு இணைந்திருக்கவேண்டும் . அப்படி இல்லாத போது விமர்சனங்கள் தவறாகவோ, தகாதவையாகவோ , விபரீதமாகவோதான் இருக்கும்.இப்படி நேராமல் இருக்காது. 

பொதுமக்கள் உணர்ச்சியின் வாயிலாகப் பேசக்கூடியவர்கள். சிந்தித்துப் பேசத்தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். சில வேளைகளில் ஓரளவு ஞானம் உள்ளவர்களும் கூட தவறான, இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் புதிதல்ல .

காவல்துறை என்பது மக்களின் நண்பன் என்கிறார்கள் . நாமும் அதைத்தான் விரும்புகிறோம். காவல்துறை சில வேளைகளில் அப்படி இருப்பதில்லை. நல்லவர்கள் பாதிக்கப்படும்போது நயம் இயல்பாகவே தவறிவிடுகிறது.

அதே வேளை பொதுமக்கள் சரியாக நடந்து கொள்கிறார்கள் என்று கொடி பிடிக்கவும் தயாரில்லை. எதைச் செய்யக்கூடாதோ  அதை வரிந்துகட்டிக்கொண்டு செய்யும் பழக்கத்தால் எரிச்சலை ஏற்படுத்துகின்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான் . இதனால் ஏற்படுகின்ற அணுகல் போலீஸ்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது.

அணுகல் என்பதில் பொதுமக்களைவிட போலீஸ்துறையினர் சரியாக நடந்துகொள்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்திகொண்டால், அவச்சொல் என்பது எழுந்த வேகத்தில் அடங்கிப்போய்விடும் . இது ஒரு பொருட்டாகவே இருக்காது.

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதுதானே போலீசருக்குக் கூறப்படும்  வார்த்தையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது பொதுமக்கள் கருத்துகளில் உண்மை அறிதல் அல்லது அதற்கான விளக்கமளித்தல்தான் சரியான வழியாக இருக்கும்.

எடுத்தவுடன் தண்டனை, அபராதம் என்பது இன்னும் கூடுதல் எரிச்சலையும் வசைபாடல்களையும் ஏற்படுத்துவிடும்.

இதற்கான சரியான அணுகல் அறிந்து செயல்பட்டால் போலீஸ்துறை மக்களின் நண்பர்களே!  

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here