4 நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை

 – வாவ் சூப்பர் திட்டம்!

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்ற நடைமுறையை ஸ்பெயின் அரசு அமல்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் மன நலனை பாதுக்காக்கும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள், 8 மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் எழுந்து வருகிறது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து நிறுவனங்கள் பரிசோதனை முயற்சியாக இதை அமல்படுத்தியுள்ளன.

அந்த வகையில் வாரத்தில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற முறையை ஸ்பெயின் அரசு அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறையை அங்கீகரித்த முதல் நாடு ஸ்பெயின்.

இந்த நடைமுறை மூலம் ஊதியத்தை குறைக்காமல் , வேலையின்மை என்ற நிலையையும் ஏற்படுத்தாமல் , அதிக உற்பத்தியை கொடுக்க முடியும் என்று அந்நாட்டு இடதுசாரி அமைப்பு தெரிவிக்கிறது. ஸ்பெயின் அரசு இந்த நடைமுறையை ஏற்கனவே பரிசோதனை செய்தது.

அப்போது பணியாளர்களின் வேலை திறன் அதிகரித்ததாகவும், ஊழியர்களின் பணிச்சூழல் ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது முன்னோடி திட்டமாக இருக்கும் என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்களில் விரைவாக இந்த திட்டத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here