பெஞ்சமின் பெரியசாமி அலசுகிறார்
-அதிபர் ஜோ பைடன் வன்மையாகக் கண்டிப்பு
இன்றைய உலகின் மிக மோசமான செயலாகக் கருதப்படுவது ஒன்றிருக்கிறது. அதுதான் இனவெறி. ஜீனோபோபியா என்று இதனைக் குறிப்பிடுகின்றனர்
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நல்ல செய்தியை அமெரிக்கா முன் வைத்தது. அதாவது இந்திய வம்சாவளிகளுக்கு கூடுதல் பதவிகள் என்றும், அரசு தலைமைப் பீடங்களில் முக்கிய இடங்களும் வழங்கப்படும் என்பதுதான் அது. அதுபோலவே அதிபர் ஜோ பைடன் வென்றதும் வார்த்தையைக் காப்பாற்றி பதவிகளும் வழங்கினார்.
அமெரிக்க துணை அதிபர் கமாலா ஹாரிஸ் இதற்கு பிள்ளையார் சுளி போட்டவர் என்றும் கூறலாம். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் காரணம் என்பதைவிட, ஜோ பைடனின் வெற்றிக்கு இவர் தீவிரமாக பணியாற்ரியிருக்கிறார் எனபதும் ஒரு காரணம்.
இந்திய வம்சாவளி என்றால் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகப்புரிந்துவிடும். அதே போலத்தான் கீழை நாட்டவர்களும். இதில் சீன நாட்டவர்கள் விதிவிலக்கல்ல. சீனா மீது அமெரிக்காவுக்கு இருக்கும் கோபம் இன்னும் வற்றிய பாடில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப்பின் என்பதைவிட தேர்தலுக்கு முன்னும் ஒரு பிரச்சினை பூதாகரமாக, பனி போர்த்திக்கொண்டிருந்தது. அமெரிக்கர்களின் கவனமெல்லாம் கோவிட்-19 மீதே இருந்ததால் அதுபற்றியே அங்கு அதிகமாகப் பேசப்பட்டது.
இனப்பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிப்போனது அல்லது அடக்கப்பட்டது என்றும் சொல்லலாம். இந்த இனப்பிரச்சினையில் அமெரிக்க கருப்பினத்தவர்களே சம்பந்த்தப்பட்டிருந்ததால் ஆசிய மக்கள் மீதான பார்வை ஆழமாக இல்லை.
ஆனால், கோவிட் 19 தொற்று அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உயிரழப்புகளிலும் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இது இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் தாம் என்ற ஆழமான எண்ணம் அமெரிக்க மனங்களில் வேரூன்றி விட்டது.
அமெரிக்க கறுப்பர்கள் மீது விழுந்துள்ள அதே இனவெறி ஆசிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது என்று அதிபர் ஜோ பைடனும் ஒப்புக்கொள்கிறார். இதை வன்மையாகவும் அவர் கண்டித்திருக்கிறார்.
இந்த எண்ணம் இன்னும் வேரூன்றி மோசமாகிவிடக்கூடாது என்பதில் ஜோ பபைடன் மிகத்தெளிவாகவே காய் நகர்த்துகிறார் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
அமெரிக்காவுக்குப் போய்வருகின்ற ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இன வாதத்திற்கு இடம்கொடுத்துவிடவேண்டாம் என்றும் பெஞ்ச் பெரிய சாமி (பெஞ்சமின் பெரியசாமி)
அமெரிக்கர்களின் கோபம் கொரோனா மீது என்றாலும் அதைக்கொண்டு வருகின்றவர்கள் ஆசிரியர்களாகத்தானிருக்கும் என்று நம்புவதால் இனப்பிரச்சினை பெரிதாகலாம்.
இதற்கெல்லாம் அதிபர் ஜோ பைடன். துணை அதிபர் கமலா ஹாரிஸ் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.