மாத்திரை மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.

-இனி ‘ஊசி’ தேவையில்லை- இந்திய நிறுவனம் அதிரடி

டெல்லி:

கொரோனா வைரசுக்குத் தடுப்பூசி இல்லாமல் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த புதிய ஆய்வுகளை பிரேமாஸ் பயோடெக் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரசின் கொடிய பிடியில் அனைத்து நாடுகளும் தற்போது சிக்கித் தவித்து வருகிறது. பொதுமக்கள் முறையான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றாதது, உருமாறிய கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருந்தாலும்கூட உலக நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி இல்லை.

இதுமட்டுமின்றி தடுப்பூசியைச் செலுத்த ஊசி, சிரஞ்ச் போன்றவையும் அதிகமாகத் தேவைப்படுவதால் மருத்து கழிவுகளும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாத்திரைகளை உருவாக்க உள்ளதாக குருகிராமைச் சேர்ந்த பிரேமாஸ் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இது சிங்கிள் டோஸ் கொரோனா மாத்திரைகளாக இருக்கும் என்றும் விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்துகள் நல்ல முறையில் பலன் அளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மனிதர்கள் மீது இந்த மருந்தின் சோதனை விரைவில் தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரேமாஸ் பயோடெக் உருவாக்கியுள்ள இந்த மருந்து கொரோனா வைரசின் வெளியே இருக்கும் புரதம் , Membrane M, and Envelope E ஆகியவற்றை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதற்காக அமெரிக்காவின் ஓரமேட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் பிரேமாஸ் பயோடெக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சிங்கிள் டோஸ் மருந்தான இதன் மூலம் மருந்து கழிவுகள் குறைக்கப்படும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்த பாரத் பயோடெக் நிறுவனம் மற்றொரு தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தடுப்பு மருந்திற்கும் ஊசிகள் தேவையில்லை. இதை நேரடியாக நாசியில் செலுத்த வேண்டும். இந்தியாவில் மனிதர்கள் மீது இந்த நாசி தடுப்பூசியின் சோதனை தொடங்கிவிட்டது. இதற்காக விஸ்கான்சின் பல்கலைக்கழகத்துடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here