பாதுகாப்பே முதன்மையானது

KUALA LUMPUR, 3 Mac -- Anggota Bomba dan Penyelamat dilihat membawa mangsa yang dipercayai cedera parah akibat dihempap sebahagian struktur tapak pembinaan sebuah lebuh raya berhampiran Lebuhraya Lingkaran Tengah 2 (MRR2) di Desa Tun Razak yang runtuh hari ini. Insiden pada kira-kira 6 petang itu melibatkan sebuah lori membawa jengkaut yang telah melanggar binaan Lebuhraya Bertingkat Sungai Besi-Ulu Kelang (SUKE) yang terletak berhadapan Terminal Bersepadu Selatan. --fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA

பெஞ்ச் பெரியசாமியின் சைட் விசிட்

-விதிகள் மாறினால் தலைவிதி மாறிவிடும்!

இவ்வாண்டில் சாலை மேம்பாட்டு பணிகளில் இரு துயரச்சமபவங்கள் நிகழ்ந்துள்ளன.  கோலாலம்பூர் , சுங்கை பீசி உலு கிளாங் சாலை உயர்த்தப்பட்ட மேம்பாலப்பணிகளில் நேர்ந்த விபத்துகளால் உயிர்ப்பலிகள்  ஏற்பட்டிருக்கின்றன . 

உண்மையில் இதனை சாதாரணமென்று ஒதுக்கிவிடமுடியாது. உயர்ப்பலி என்பது விளையாட்டான காரியமல்ல. உண்மையில் சாலை மேம்பாட்டுப் பணிகளின்போது உயிர்ப்பலி ஏற்பட காரணம்தான் என்ன?

 

பதில் மிகச்சுலபமானது. கவனக்குறைவு என்பதுதான் சரியான பதில். யாருக்குக் கவனக்குறைவு என்பது கேள்வியாகும்போது சற்று நிதானமாகச் சிந்திக்கவும் தோன்றுகிறது.

சாலை மேம்பாட்டுப்பணிகளில் மேம்பாலப் பணிகள் மிகவும் ஆபத்தானவை. இப்பணிகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ளூம் நிறுவனங்களும் முறையான தகுதிபெற்றிருக்க வேண்டும்.

பா

 

துகாப்பு குறித்து நன்கு அறிந்த நிறுவனங்களுக்கே குத்தகைகள் வழங்கப்படுகின்றன என்றாலும் அந்நிறுவனங்கள் தொழிலைத் தொடங்கியவுடன் பாதுகாப்பை முறையாகக் கையாள்கிறதா என்பதுதான் முதற்கேள்வியாக இருக்கிறது,

இல்லை-  என்பதுதான் சரியான பதிலாக விழும் ? எப்படி என்ற கேள்விகள் தொடர்ந்து  எழுமானால்  அதற்கு அண்மையில் நிகழ்ந்த உயிர்ப்பலி சம்பவங்களே உதாரணம் என்று  கூறிவிடலாம்.

முறையான் பாதுகாப்பை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். விபத்து நிகழ்ந்தபின் பாதுகாப்பு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதில் எந்தப்பயனும் இல்லை.

 

உயிர்கள்

 போகட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பதல்ல சாலை மேம்பாலப்பணிகள். சாலைப் போக்குவரத்தையும் முறைப்படுத்த வேண்டும். பணிகளும் நிறைவேற வேண்டும். அதோடு பாதுகாப்பையும் நிலைநிறுத்த வேண்டும். இவையாவும் சரிவர நடப்பதை குத்தகை நிறுவனமும் மேம்பாட்டு நிறுவனமும்  உறுதி செய்ய வேண்டும். இதற்கு அரசு வகுத்திருக்கும் 

இது போன்ற  நேரங்களில் நிறுவன பாதுகாப்பு ஆதிகாரியின் கண்காணிபும் ஆலோசனையும் மிக அவசியமாகிறது.  விபத்துகல் அதிகம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு கூடுதல் கண்காணிப்பைச்செலுத்த வேண்டும். சாதாரண தொழிலாளர்களிடம் இப்பொறுப்பு விடப்படக்கூடாது. சில் நேரங்களில் இப்படி நடக்கவும் சாத்தியம் உணடு.

தொழிற்துறைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்வேண்டும் என்பதை அரசுசார்ந்த அமைப்பான நியோஸ் (Niosh)  கழுகுக் கணகளோடு கவனம் செலுத்த வேண்டும். இறப்பு விழுக்காடு இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நியோஸ் கடமையாக இருக்க வேண்டும்.

காலையில் பணி தொடங்கியதும் 30 நிமிடங்களாவது பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும். சூழ்ந்துள்ள ஆபத்துகள்  குறித்தும் அவற்றைத்தவிர்ர்கும் நடவடிக்கைகள்  குறித்தும்  தெளிவக்கப்பட் வேண்டும் .

இவற்ரையும் மீறி விபத்து நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகாமாக இருப்பதாக அறிந்தால் மாற்றுவழிப்பாதைகள் அமைக்கப்படவேண்டும்.

இவையாவும் மிகச்சரியாக நடக்கிறதா என்பதை நியோஸ் கண்காணிக்க வேண்டும் . அல்லது தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

பல வேளைகளில் குறிப்புகளும் சந்திப்புகளும் வேலைக்கு உதவாது. பேச்சு வேறு செயல்வேறு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் .

குத்தகைப் பணிகளுக்கு ஏற்ப பொது பாதுகாப்பு அம்சங்கள் மாறுபடும்  ஆனாலும் பாதுகாப்பு என்பது பாதுகாப்புதான். அதில்  மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

வரும்முன் காக்கும் பண்பு குத்தகை நிறுவனங்களுக்கு இருந்தாக வேண்டும். 

இப்போதெல்லாம் மேம்பாட்டுப்பணிகள் நடக்கும் சாலைகளைக் கடக்கவே மக்கள் அஞ்சுகிறார்கள்.  கடக்கும்போதெல்லாம் மரணபயம் கவ்விக்கொள்கிறது என்றால், பாதுகாப்பின் மீது எழும் ஐயம்தானே  காரணம்.

இனி மரணங்கள் நிகழாமல், பாதுகாப்பை வலுப்படுத்துங்கள்! இல்லையெனில் வழித்தடத்தை மாற்றுங்கள். 

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here