எலிகள் மீது விழுந்த பழி

-மதுபாட்டில்களை தூக்கி சென்று விட்டன…

உத்தரப்பிரதேசம்:

எலிகள் மீது விழுந்த பழி… உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை எலிகள் தூக்கி சென்றுவிட்டதாக போலீசார் கதை விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஈடா மாவட்டத்தில் உள்ள கோட்வாலி தேஹத் காவல்நிலையத்தில், போலி மதுபானம் விற்றதாக 1,450 மதுபாட்டில்கள் இருந்த 239 பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுபாட்டில் பெட்டிகள் அனைத்தும் மாயமாகி விட்டதாக மாவட்ட எஸ்.பி. உதய்சங்கர் சிங்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த அங்கு சென்று விசாரணை நடத்திய போது, மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை எலிகள் தூக்கிச் சென்று விட்டதாக காவல்நிலைய ஆய்வாளர் , ஏட்டு கூறி உள்ளனர்.

மேலும் காவல்நிலையத்தில் உள்ள டைரிக்குறிப்பில் 239 அட்டைப்பெட்டிகளை எலிகள் நாசம் செய்து விட்டதாக எழுதப்பட்டிருந்தது.

இதை கண்டு கோபமடைந்த எஸ்.பி. சம்பந்தப்பட்ட ஆய்வாளர், ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், உண்மையான காரணத்தை விளக்க இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here