பணி அனுமதி பெற்ற வெளிநாட்டு உதவியாளர்கள் மலேசியாவில் பணிக்கு திரும்பலாம்

புத்ராஜெயா: வேலை அனுமதி பெற்ற ஆனால் சொந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு  உதவியாளர்கள் மலேசியாவுக்கு வேலைக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தற்காப்பு அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

விடுமுறைக்காக வீடு திரும்பிய மற்றும் தொற்றுநோய்களின் போது நாட்டின் எல்லைகளை அரசாங்கம் மூடியபோது சிக்கித் தவித்த தங்கள் பணிப்பெண்களை வேலைக்குத் திரும்ப அனுமதிக்குமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இப்போதைக்கு, இதை நாங்கள் அனுமதிப்போம். ஏற்கனவே விசா மற்றும் பணி அனுமதி பெற்ற வெளிநாட்டு பணிப்பெண்கள் மலேசியாவில் வேலைக்கு திரும்பலாம் என்று அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) ​​தெரிவித்தார்.

மலேசியா திரும்ப விரும்பும் வெளிநாட்டு வீட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய ஒப்புதல் பெற MyTravelPass   மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

நிலையான இயக்க நடைமுறை என்னவென்றால், அவர்கள் மலேசியாவுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஸ்வைப் பரிசோதனை செய்ய வேண்டும். வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார், தனிமைப்படுத்தப்பட்ட செலவுகள் அவர்களின் முதலாளிகளால் ஏற்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here