கோவிட் தடுப்பூசியால் கடுமையாகப் பாதிப்பு

தினமும் அவதிப்படும் பெண்!
பிரித்தானியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக வலியில் அவதியுற்று வருகிறார்.
ஸ்காட்லாந்தில் வாழும் லேய் கிங் (41), இரண்டு வாரங்களுக்கு முன் ஆஸ்ட்ராஜெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அவரது முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் என ஓர் இடம் விடாமல் தோல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றின.

தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்களாகியும், இன்னமும் வலியால் துடித்துவருகிறார் அவர்.

அவரின்  மகன் ஆட்டிஸம் குறைபாடு கொண்டவன் என்பதால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள  முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால், யாரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேனோ அவனையே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் லேய்

அவ்ரின்  மகனான எய்டன் (13), அம்மாவின் தோற்றத்தைப் பார்த்து பயந்துபோய் அவருக்கு அருகிலேயே வருவதில்லையாம். இப்போது அவனை கவனித்துக்கொள்ள வேறு ஆள் ஏற்பாடு செய்திருக்கிறாராம் லேய்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100இல் ஒருவருக்கு இப்படி தோலில் பிரச்சினைகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் பிரச்சினையிலிருந்து விடுபட மருத்துவமனைகள் பல ஏறியும் பலனில்லை என்பதால் தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க இருக்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here