நீரில்லா நிலம் பாழ்

அலசுகிறார் பெஞ்ச் பெரியசாமி 

  • பள்ளியிலும் பாடமாக வேண்டும்!

நீறில்லா நெற்றிபாழ் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இது வார்த்தை மட்டும் அல்ல. வார்த்தைக்குள் அறிவியல் இருக்கிறது என்பது அறிவில்லாதவர்களுக்குப் புரியாது. 

ஏதும் புரியாதவரைதான் சிரமமாக இருக்கும். புரிந்துகொண்டால் அதுதான் இறைவன், இங்கு இறைவன் என்பதை அறிவைக் குறிக்கும் அசாத்திய சொல்லாகும். பொருள் உணர்ந்துகொண்டால், வாதத்திற்கு இடமே இல்லை. வாதம் என்று வந்துவிட்டால் விளங்கவில்ளையோ?

சரி விஷயத்திற்கு வருவோமே! அதாவது நீறில்லா  நெற்றி பாழ் என்பதுபோல , நீரில்லா நிலமும் பாழ்தான் என்பது இன்றைய முடக்கு  வாதமாக இருக்கிறது,

உலகத் தேவையாக ,ஒட்டுமொத்த மக்களுக்கும்  நீரின் அவசியம் மிக அதிகம். நீரில்லாமல் எந்த உயிரும் வாழ்ந்துவிட முடியாது. எத்துணைதான் சேமிப்பு என்றாலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. 

மலேசிய நீர்வளம் மிகச் சிறப்பாணவை. ஆனாலும் நாட்டின்  நீர் ஆளுமை மட்டும் வலுவாக இல்லை என்பதுதான் நீண்ட நாள் குறைபாடாகவே  இருக்கிறது. 

அரை நூற்றாண்டுகளுக்குமுன் இத்துணைப் போராட்டங்கள் இல்லை. செல்லுமிடமெல்லாம் சிறப்பான நீர் வளங்கள்  இருந்தன. சாலைகளில் கூட பொது குழாய்கள் இருந்தன. பள்ளிகள் செல்லும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவின.

நாட்டின் தேவைகள் கூடக்கூட நீரின் தேவைகளும் அதிகமாகிவிட்டன. அதிகத் தேவைக்கேற்ப நீர்வளம் போதவில்லை என்பதுதான் இன்றைய கூப்பாடாக இருக்கிறது என்பதிவிட வணிகமாக மாறிவிட்டது என்பதுதான் மக்களின் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

முன்பெல்லாம் நீர்வளத்தைக் கையாள   ஒரே அமைப்பு மட்டுமே இருந்தது. அதில் உட்பிரிவுகள் மட்டுமே இருந்தன. அனைத்தும் சிறப்பாக இயங்கின. 

காலப்போக்கில் தனி மனித ஆதிக்கம் அல்லது  லாபம்தேடும் முயற்சிகளில் நீரைக்கூட வணிகமாக்கி, அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதுதான் இன்றைய வேதனை. 

இயற்கையின் அருட்கொடை நீர் இன்று வணிகமாகிட்டது.  நீரை மாசுபடுத்திவிட்டு அதைச் சுத்திகரிக்கும் வணிகம் கொடிகட்டிப்பறக்கிறது. இதில் இன்னும் ஒருபடி மேலே போய் பாட்டில் நீர் தயாரிப்புகள் கோலோச்சு வாழ்கின்றன.

இறைவன் கொடுத்த இயற்கை நீர் மக்களுக்கு இல்வசமாக வழங்கப்படுவதுதானே முறை. மின்சாரம் என்பது தயாரிப்பு . தயாரிக்கும் பொருட்களுக்குத்தானே கட்டணம் செலுத்தப்படவேண்டும்?

ஊழல் பேர்வழிகள் இன்னும் உல்லாசமாக அனைத்தையும் அனுபவித்துகொண்டு, கடுகளவு கூட வெட்கமே இல்லாமல் அழகிய தூக்கம் போட்டு எழுகிறார்கள் என்று  முன்னாள் அமைச்சர் டான்செரி ரபிடா அஜிஸ் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் அப்படித்தான் நடக்கிறது.

ஓர் அலுவலகத்திற்குச்சென்று வருவதுபோல ஊழல் ,லஞ்ச லாவண்யர்கள் நீதி மன்றத்திற்குச் சென்று வருகிறார்கள். நாட்டில் கொள்ளையடிக்கப்படும் பணத்தைக்கணக்கிட்டால் பல ஆண்டுகளுக்கு மக்களுக்கு இலவச நீர் வழங்கலாம்.

ஊழல் செய்வது மோசடியல்ல .இன்பமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிபோல ஆகிவருகிறது என்று  அவரின் கூற்று இருக்கிறது.

இப்போது நீர் விஷயங்களும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழுந்து வெகு நாளாகிவிட்டது.  இந்த ஐயம் பொய்யா? மெய்யா என்று ஆய்வதைவிட மாற்றுவழிகளால் நீர்வளம் கையாளப்பட தேசிய அளவில் மட்டுமே கழகம் செயல்படவேண்டும் என்பதுதான் நல்லோர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

மாநிலங்கள் தனித்தனியே  நீர் வளத்தை ஆளுமை செலுத்துவது சிறப்பானதல்ல. இதை விட்டு தேசிய நீர் ஒன்றியம் அமைக்கப்பட்டு செயல்பட்டால் மட்டுமே நீர்த்தகராறு குடும்பத்தகராறு போலல்லாமல் செயல்படும் . மாநிலங்கள் யாரால் ஆளப்பட்டாலும்  நீர் வளம் அதன் போக்கில் செயல்பட தேசிய ஒன்றியம் அவசியம்.

ஒரே நிர்வாகம் .அது தேசிய அளவில் மட்டுமே செயல்படவேண்டும்.  ம்லாயா பல்கலைக்கழகம்  அத்ற்கான் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் . உயர் நீதிமன்றம் காப்பாளராக செயல்படவேண்டும். 

நீர் தயாரிப்பல்ல. அது இறைவனின் அருட்கொடை. அதற்குக்கட்டணம் என்றால் பிற உயிரைனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டுமல்லவா?

நீரில்லா நிலம் பாழாகிவிடும் என்பது பள்ளியின் கல்வியாகவும் இருக்க வேண்டும்.

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here