முகக்கவசம் இல்லையா ! அப்படியானானால்

 

பெஞ்சமின் பெரியசாமியின்   இன்றைய அலசல்

பெட்ரோல் டீசல் கிடையாது

நாட்டில் கொரோனா தாக்கம் குறைவதாக இல்லை. கூடுவதும் குறைவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.  அன்றாடம் ஆயிரம் தாண்டிவிடுக்கிறது எண்ணிக்கை . இதற்கு என்னதான் வழி? 

வழி தெரிந்தால் நாங்களும் சொல்வோம்லே  இப்படியும் சொல்லத்தான் தோன்றுகிறது. வழி இருக்கிறது ஆனால், தெரியவில்லை. அதை அடையும் வழியை நோக்கிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கத்தானே செய்யும். அந்த முடிவும் முடிவுக்கான வழியும் இன்னும் புலப்படாததல்தான் தொற்று தோகை விரித்தாடுகிறது.

அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. நாமே என்பது சரிதானா? சரிதான் என்கிறீர்களா? 

இது பற்றி கொஞ்சமாய் பேசுவோமா? 

ஒரு நல்ல செய்தியை , அல்லது வழியை , அது அனைவருக்கும் சாதகமானது என்றால் பின்பற்றுவதில் தவறு இல்லை. அது நமது அடையாளம் இல்லை என்று ஒதுக்கிவிட்டால் நட்டம் நமக்குத்தானே!.

அது என்ன வழி?

இன்றைய நிலையில் நடமாட்ட காட்டுப்பாடுகள் மீறப்படுவதால்தான் தொற்று சொகுசாகப் பயணம் செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் விதிகளைப் பின்பற்றூவதில்லை என்பதும் தெரியும். இது மக்களின் பலவீனம்.

பயணம் என்பதில், கூடல் இடைவெளியைக் குறிப்பிடலாம். அந்த வகையில் கார், மோட்டர் சக்கிள்களில் பயணைக்கைன்றவர்களே மிக அதிகம் . கார்களில் செல்கின்றவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. அல்லது பொருட்படுத்துவதில்லை. அதேபோலத்தான் மோட்டார் சைக்கிள்களில் செல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இவ்விரு பயன்பாடுகளையும் தடுத்து நிறுத்தவதில் வெற்றி பெற முடியவில்லை. அனாலும் கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஒரே வழி எண்ணெய் நிலையங்களில் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பெட்ரோல்- டீசல் கிடையாது என்பதுதான். இப்படிச்செய்தால் பலன் கிடைக்க வாய்ப்புண்டு .  கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 

அதுவா! இதுவா! என்று யோசிப்பதைக்காட்டிலும் ஒன்றைச்செய்து பார்ப்பதில் தவறுய் நேரவில்லையென்றால் அதைச்செய்யலாமே! இதில் கவுரவத்திற்கு இடமில்லை. 

முகக்கவசம் இல்லையென்றால் நடமாட்டம் இல்லை என்றாகிவிடும். தொற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்புணடு. தேவைக்கு மட்டுமே நடமாட்டம், பயணம் என்று மாறிவிட்டால் தொற்றின் எண்ணைக்கையும் சரியக்கூடும்.

எண்ணெய் நிலையங்களில் இன்னும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தேவை என்பதுதான் முக்கியம்.

பெருநாள் நெருங்குவதால் இப்போதே இத்ற்கு தயாராகலாம் அல்லவா! நல்லது சொன்னா செயல்படுத்த முயற்சிக்கணும். இதற்கு நிறம் பார்க்கக் கூடாது.

தடுப்பூசிகளால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. பொது ஒழுங்கும் துணைபுரிய வேண்டும். நமக்கும் ஒழுக்கம் வேண்டும்

 

கமெண்ட்: நாங்களும் ஐடியா கொடுப்போம்லே!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here