–முடியலப்பா … அலறும் நடிகர் நட்டி!!
கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தில் நடைபெற்ற போலீஸ் வன்முறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது கர்ணன்.
தங்கள் ஊரில் பேருந்து நில்லாமல் செல்வதை எதிர்ந்து எழுந்த மக்கள் போராட்டமும் அதன் பிறகு நடந்த வன்முறை சம்பவங்களுமே கதையின் அடித்தளமாகும். இந்தப்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தில் முக்கிய வேடமான போலீஸ் அதிகாரி கண்ணபிரான் வேடத்தி நடித்த ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நட்டி (என்ற நடராஜ்)க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் இவர் செய்யும் கொடூரங்களைக் கண்டித்து அவரை திட்டவும் செய்கிறார்கள் ரசிகர்கள். போன் செய்தே திட்டும் அளவுக்கு அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் நட்டி. இது குறித்து மகிழ்ச்சி கலந்த வேண்டுகோளை ரசிகர்களுக்கு விடுத்துள்ளார் நட்டி.
திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார் நட்டி.