2,000 ஆண்டுகளாக சம்ஸ்கிருதம்

-சீனாவில் பிரபலம்’

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக சம்ஸ்கிருத மொழி பிரபலமாக இருப்பதாக அந்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியா் வாங் பாங்வெய் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

பண்டைய இந்தியாவில் இருந்து பெளத்த மதத்துடன் சம்ஸ்கிருத மொழியும் சீனா வந்து சோந்தது. சீனாவில் சம்ஸ்கிருத மொழி குறித்த ஆய்வுகள், கற்பித்தல் பணிகளுக்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது.

இந்தியாவில் இருந்து பெளத்த மதம் சீனா வந்த பின்னா், சீன பெளத்த துறவிகள் இந்தியாவின் பண்டைய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயா்த்தனா். அப்போது முதல் சீனாவில் சம்ஸ்கிருத மொழியை படிப்பதும், சம்ஸ்கிருத ஆய்வுகளும் தொடங்கின. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிந்து, பெளத்த மதங்கள், பண்டைய இந்திய மருத்துவம், வானவியல், கணிதம் உள்ளிட்டவற்றை சீனா்கள் கற்பதற்கு சம்ஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்தது.

நான்காம் நூற்றாண்டைச் சோந்த காஷ்மீா் பிராம்மணரான குமாரஜீவா என்னும் அறிஞா் சீனாவில் தங்கியிருந்தபோது பெளத்த சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயா்த்தாா். அது அவருக்கு ‘சீனாவின் தேசிய ஆசிரியா்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்திய, சீன பண்பாட்டு நாகரிகங்களுக்கு இடையே உறுதியாக அடித்தளமிட்ட எண்ணற்ற சம்ஸ்கிருத அறிஞா்களில் அவரே முதன்மையானவா். மரியாதைக்குரிய அறிஞராகவும் சிறையிலுமாக அவா் 23 ஆண்டுகள் சீனாவில் கழித்தாா்.

இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள ஆா்வம் காட்டுவோா் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. சம்ஸ்கிருதம் அதற்கு சிறந்த வழியாகும். பல அரிய பண்டைய சம்ஸ்கிருத நூல்கள் சீனாவில் உள்ளன.

இவை இந்தியாவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. நூறாண்டுகளாக பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

கமெண்ட்: எல்லை திருடும் ஆசையை விட்டொழித்தால் எந்த நாடும் சிறந்த நாடுதானே.  பண்பிலும் இந்தியம் தொன்மையானது என்பதையும் சீனா அறிந்துகொள்வது நல்லது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here