நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி!

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. சாமான்யன் தொடங்கி அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை குறைந்த நாட்களில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. படங்களில் அதிகம் நடிக்காத செந்தில், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமீபத்தில் கூட அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த ஒரு வாரமாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கமெண்ட்: செந்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கக்கூடாது. அரசியலை கொரோனா விரும்பவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here