மக்கள் மனத்தில் மாமன்னர் தம்பதியர்

–  தமிழுக்கு  அமுதென்று பேர்

மக்கள் யாவரும் மன்னரின் குழந்தைகள் போன்றவர்கள் குழந்தைகளில் எவ்வித பேதமும் இல்லை என்பதற்கு மலேசிய மாமன்னர ஓர் எடுத்துக்காடாய் விளங்குகிறார்.

குறிப்பாக இனம் என்பது மக்கள் அணியும் வண்ண அழகு ஆடைகள் என்பதாக நாட்டில் கருதப்படுகிறது. மன்னரின் பார்வையிலும் அப்படித்தான் இருக்கும். 

 

மலேசியக் கொடியும்  வண்ணத்திலானவை. அந்த நிறங்கள் வெறும் நிறங்கள் என்று மட்டும் என்று கருதிவிடக்கூடாது. இனங்களின் ஒற்றுமையக் காட்டும் அடையாளப் பிரதிபலிப்புகள் அதில் இருக்கின்றன. அந்த வண்ணத்தில் எது சிறந்தது என்பதல்ல வாதம். மஞ்சள் மட்டும் அரசர்க்குரியது.

அந்த அடையளங்களின் தத்துவம்போல் ஒவ்வொரு வண்ணத்திற்கென்றே கலை கலாசார பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன.  அவை அவரவர்க்கான அடையாளங்கள். அதில் இடையூறுகள், குறுக்கீடுகள் என்பதெல்லாம் இல்லை. இருக்கமுடியாது, கூடாது என்று அரசு சட்டத்திலும் இருக்கின்ன்றன.

ஆனாலும் மக்கள் அச்சட்டத்தை ஒருபுறம் வைத்துவிட்டு இயல்பாகவே ஒன்றுபட்டிருப்பதால் சட்டத்திற்கான வேளைக்கு வேலை இல்லாமலே போய்விடுகிறது.

இதைத்தான் மாமன்னரும் தமது வாழ்த்துச்செய்திகளில் எப்போதும் குறிப்பிடுகின்றார். பெருமதிப்போடு வாழ்த்து செய்திகளில் தேசிய உணர்வைக் குறிப்பிடுகின்றார். 

இந்தியர்களிடையே பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனாலும் இந்தியர்களாகத்தான் மதிக்கப்படுகிறார்கள். இந்தியர்களுக்கிடையில் நடைபெறும் விழாக்க

 

ளும் விழா சார்ந்த மக்களையும் மாமன்னர் தம்பதியர் வாழ்த்துகின்றனர் என்றால், அவரின் ஆழமான மக்கள் பார்வைக்கு விளக்கம் தேவையில்லை. பொதுமைப் பூக்கள் பூரிப்பாய்க் கொட்டிக்கிடப்பதை உணரமுடியும்.

தமிழ் , மலையாளம், சீக்கியர்கள் , தெலுங்கர்கள் என பிரிவுகள் நம்மிடையே இருந்தாலும் தமிழர் என்ற ஐக்கியத்தில் மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.

தமிழ் என்பது ஓர் இனத்தை மட்டுமே பிரதிபலிப்பதல்ல. அம்மொழிக்கு இனம் , ஜாதி, பிரிவு, வகை, தொகை,நிறம் இல்லை. அதனால்தான் தமிழ், தமிழர் என்று அனைவரும் போற்றுகின்றனர்.

இதை வேறு கோணத்தில் வகைப்படுத்தி, பிளவுகளை ஏற்படுத்துவதை விட்டு, தமிழ் என்னும்  செடியில் பூக்கும் மணமலர்களாக  அனைவரும் இணைந்து வாழ்ந்தால் நாட்டின் மக்களில் இந்திய மக்களும் செழிப்பாக வாழ முடியும் .

தமிழை வாழ்த்தினால் தலைமுறை வாழும். தமிழால் கிளைவிரித்த இணை மொழிகள் சிறப்படையும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களும் மதிக்கப்படுவார்கள்.

இத்தகைய மதிப்பை மலேசிய மாமன்னர் தம்பதிகள் நமக்கு எடுத்துக்காட்டி, புத்தாணடு வாழ்த்து கூறியிருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது . ஓவோரு பெருநளும் மக்களின் நலத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் கொண்டாட்டப்படுகின்றன என்பதை அணுவாக ஆய்ந்து வாழ்த்து சொன்ன மாமன்னர் தம்பதியர் சிறந்து போற்ரப்படத்தக்கவர்கள். 

எப்போதுமே பெருவாரியான ஒப்புதல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வழக்கு. இந்துப் புத்தாண்டு என்பதற்கு நிறைந்த விளக்கங்கள் கூறப்பட்டு, அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இனி தமிழ்ப்புத்தாண்டு என்றால் என்ன , இந்துப்புத்தாண்டு என்றால் என்ன என்ற பகுப்பாய்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சித்திரைப் புத்தாண்டை நிறைவாய் கொண்டாடுவோமே!

தமிழ்ப்புத்தாண்டை அனைவரும் போற்றுவோம். மொழியால் ஒன்றுபடுவோமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here