இந்திய – சீன படைகள் வாபஸ் ?

 சத்தியம் காக்குமா  சீனா?ஆது சொல்வதெல்லாம் வீணா?

புதுடில்லி:
எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்தியா – சீனா இடையேயான, 12 ஆவது சுற்று பேச்சு ஒன்பது மணி நேரம் நடந்தது. படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து எல்லையில் இரு நாட்டு படைகளும் முகாமிட்டுள்ளன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.
கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சம்மதம்இது தொடர்பாக இரு ராணுவ எல்லை படை பிரிவின் தலைவர்கள் இடையேயான, 12 ஆவது சுற்று பேச்சு சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடந்தது.
ஒன்பது மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த பேச்சு திருப்திகரமாக இருந்ததாக நம் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ‘கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்த படைகளை திரும்பப் பெற இருதரப்பும் சம்மதித்துள்ளன. ‘விரைவில் இது பற்றிய அறிவிப்பை இரு தரப்பும் இணைந்து வெளியிடும்’ என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கமெண்ட்: இந்தியா ஞான பூமி
சீனா பாவ பூமி . வாக்குறுதிகள் இது வரை காப்பாற்றப்பட்டதாக சரித்திரமில்லையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here