கொரோனாவை தடுக்கவல்லதா தடுப்பூசி?

போட்டுக்கொள்ளும் முன் நன்கு யோசி!

தடுப்பூசி – இப்போது இதுதான் மக்களின் பொதுவான வார்த்தையாகவும் கேள்வியாகவும் தொக்கி நிற்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளத்தான் வேண்டுமா? அல்லது போட்டுக்கொள்ளாமல் இயக்க நடைமுறை, கூடல் இடைவெளி  மட்டுமே போதுமா என்ற சிந்தனைச் சிக்கலிலும் மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் கலைஞர் வீவேக்கின் மரணச்செய்தி மக்களை உலுக்கிகொண்டிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போதே  தடுப்பூசியின் மீது அபார நம்பிக்கையோடு அதை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு ஆலோசனை சொன்ன சின்னக்கலைவாணர் விவேக், மறுநாளே மரணத்தை தழுவியிருக்கிறார். அவரின் மரணம் தடுப்பூசியின் மீதான நம்பிக்கை வேரை  ஆழமாய் அறுத்துப்போட்டுவிட்டதாகவே உணரமுடிகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மரணம் இல்லை. அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவும் . இருதய பலஹீனம் காரணமாகவும் மரணம் என்று மருத்துவமனை தரப்பு கூறுகிறது.

இது, உண்மையா ! பொய்யா! என்பது வாதமல்ல என்றாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவுதான் என்று நம்புவதற்கு கூடுதல் சாத்தியம் இருக்கிறது என்றே மக்களும் பிரபலங்களும் நம்புகிறார்கள். இக்கூற்றை சும்மா ஒதுக்கிவிடவும் முடியாது.

போடப்படும் தடுப்பூசி  அனைவருக்கும் என்ற நோக்கோடுதான் செயல்படுகிறது. ஆனால், அந்தத்தடுப்பூசி ஒவ்வொரு மனுதனுக்கும் மாறுபடும் என்பதை அசாதாரண நம்பிக்கையாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

தடுப்பூசி போடுமுன் போட்டுக்கொள்கின்றவர் உடல்ரீதியாக தகுதியானவரா என்பதைக் கண்டறிதிருந்தால் விவேக் மரணத்தைத்தவிர்த்திருக்கலாம் அல்லவா! ஏன் அப்படிச்செய்யவில்லை என்பது தலைதூக்கி நிற்கிறது. அப்படிச் செய்தார்களா என்பதும் இருளில் மூழ்கிக்கிடக்கிறது. 

உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு மரண விளையாட்டாகவே இருக்கிறது என்பதை நடிகர் மன்சூர் அலிகான் வாதத்திலிருந்து தெரிய வருகிறது.

அது வாதம் என்றாலும் வீண்வாதமல்ல என்பதையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். பிதற்றல் என்றாலும் உண்மை இல்லாமல் இருக்காது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணத்தில் அதிகமான கீறல்கள் விழுந்திருக்கின்றன். 

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் எதிர்வினை பாதிப்பும் இறப்பும் கணிசமாக கூடிவருகின்றன. பல செய்திகள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வந்து மோதுகின்றன. இதையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்

தடுப்பூசி தேவைதான் என்பது பொதுக்கருத்து என்றாலும் தடுப்பூசியின் மீதான நம்பிக்கை பாழ்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலத்தில் ஒரு வார்த்தை விரிவாக ஆராயப்பட்டது. அதாவது தடுபூசியின் முழுப்பயன்(வீரியம்) வெளிப்பட ஈராண்டுகளுக்கு மேலாகும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். அதற்கான காரணத்தையும் கூறியிருந்தனர்.

அதுதான் உண்மையென்றும்

 

 அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் தடுப்பூசிகள் குவியத்தொடங்கிவிட்டன என்றால், உண்மையிலேயே அனைத்தும் கண்டுபிடிப்புகளா அல்லது அவர்கள் கண்ட  பிடிப்புகளா என்ற ஐயமும் எழுகிறது. அதற்கான சந்தேக உறுதிப்பாட்டை தற்போதைய மரணங்கள்  காட்டுகின்றன. 

இந்நிலை அனைத்து நாடுகளிலும் உண்டு. மலேசியாவில் இருமுறை போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று விட்டபாடில்லை. இதில் தடுப்பூசியின் தயாரிப்பில் குறைபாடா? குறைபாடுள்ளவர்களுக்குத்தடுப்பூசியா என்ற ஐயாப்பாடே மேலோங்கியிருக்கிறது.

தடுப்பூசியில் குறைபடுகள் இல்லையென்று வாதிடவும் முடியாது. அதேவேளை யாருக்கெல்லாம் தடுப்பூசி பொருந்தும் என்பது ஆய்வு செய்யப்படவும் வேண்டுமல்லவா! அப்படிச்செய்யப்படுகிறாதா?

இரு தரப்பிலும் தவறு இருக்கலாம்.  இதைத் திருத்திக்கொண்டால் தடுப்பூசி முக்கியமானதுதான் என்பதை மக்கள் உணரக்கூடும்குணர்வதற்கு முன் வலுவான நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பு ஊசியால் இழக்கக் கூடாதவர்களை  எல்லாம் வலுக்கட்டயமாக இழந்துவிடக் கூடாது என்பதுதான் கவலை.

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here