பழைய மரங்கள் புதிய கனிகள்

புனிதமாகட்டும் சூழல்

ஆதாம் ஏவாளை நம்புகின்ற மனிதம், அனைவரும் ஒரு தாயிலிருந்து உருவான கிளைகள் என்பதை மறந்துவிடுவதற்கு எது காரணமாக அமைந்துவிடுகிறது?

இப்படியொரு கெள்விக்கு அத்துணை விரைவாகப் பதில் சொல்லிவிட முடியாததுதான், ஆனாலும் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஆதாம் ஏவாள்தான் உண்மை என்று நம்புகின்றவர்கள் அதிகம். அந்தக்கதைதான் இன்றுவரை பேசப்படுகின்றன. அதை நம்புகின்றவர்கள் அனைவரும் ஒன்று என்ற அடிப்படைத் தத்துவத்தை மட்டும் ஏன் நம்ப மறுக்கின்றனர்.

நிறம் என்பது இயற்கையின் படைப்பு . அது வாழும் சூழலின் அடையாளம் , இயற்கையின் மொழிபெயர்ப்பு.  பேச்சும் மொழியும் அச்சூழலின் அடையாளம்.  சைககைள் மொழியாக மாறிய தொன்மப் பரிணாமம். தொன்மம்  என்பது வயதின்  கணக்கு. 

தொன்மம் பேசுவது சாதித்த மகிழ்ச்சி. குடும்ப பெருமை போன்றது. பெருமை பேசிக்கொள்வது மகிழ்ச்சியின் அடையாளம் . மகிழ்ச்சியான பெருமை எப்போதும் தவறாகாதே!

சரி அது போகட்டும்,

இன்று அறிவின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் அனைத்தையும் தவறாகத்தானே ஆய்வு செய்கிறான். தப்பு செய்துவிட்டு அதற்குப்பரிகாரம் தேடவும் மறுக்கிறானே! ஏன்?  

இதுதான் அமைந்த  குணமா? இவர்கள் தாம் ஆதாம் ஏவாள் பெற்றெடுத்த தோன்றல்களா! மனிதனின் அறிவுசார்ந்த அடையாளமான திறத்தை ஒதுக்கிவிட்டு நிறத்தை மட்டுமே பார்த்து கணக்குப்போடுகின்ற தீங்கிழைக்கும் குணம் எப்படி வந்தது. அப்படியென்றால் ஆதாம் ஏவாள் குணமும் அதுதானோ? அதை நம்புகின்றவர்கள் குணமும் அப்படி வந்ததா!

மனிதனுக்கு இலவசமாகக்  கிடைக்க வேண்டிய  கல்வி வணிகமாகிவிட்டது. கல்விக்கூடங்களில் விகிதாச்சாரம் என்ற பிணவாடை வீசுகிறது. இதை இன்னார்தான் கற்கமுடியும் என்ற பேதப்பிரசங்கங்கள் ஒலிவாங்கியில் ஓங்கி ஓலமிடுகிறது.

ஆதாம் – ஏவாள் இதைத்தான் ரத்த அணுவில் உயிர்ப்பொருளாய் வைத்திருந்தார்களோ! அல்லது இடையில் கொரோனா போல் ஒட்டிக்கொள்ள  ஏவல் செய்தார்க்ளோ!

பள்ளியில் பிரித்தாலும் பகடையாட்டம். நெல்லுக்குப்பதில் புல்லறுத்துப்போடும் புண்ணாக்கு மூளை. இதில் குளிர்காயும் எந்த இனத்தையும் ஆதாம்-  ஏவாள் மன்னிக்க மாட்டார்க்ளே! 

இன்றைய உலகம் ஆயுதங்களை நிறுத்திவிடும் அசகாய முயற்சிக்கு கிளை தாவிக்கொண்டிருக்கிறது. விஷத்தூவல்களைக் கொண்டு மனித இனத்தின்  மரணப்பாதைக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

இவையாவும் சூழல் தவறென்றால் சூழலை மாற்றுவது தானே பொருத்தமாக இருக்கும்.  சூழல் மட்டும் மாறவில்லை. மனிதன் சூழலுக்கு ஏற்பவும் மாறாமல் சூழலை விஷமாக்கிக்கிக்கொண்டிருக்கிறான்.

அதனால், இயற்கை நலங்கெட்டு புழுதியில் புறழ்கிறது சூழல் பாதிக்கப்பட்டு புயலாகவும் பூகம்பமாகவும் மாற்றிகொள்வது சூழலின் தவறல்ல, தங்களை   மேதைகள் என்று ஒலிபெருக்கியைக் கொண்டே அலறவிடும் இனப்போதையின் தவறு.

சூழலுக்காக மரம் நடுகின்ற நல்லோர் மத்தியில் . சூழ்ச்சிகாக மதம் நடுகின்ற நரகா அசுரன் இருக்கும் வரை மனிதம் எப்படி  பிழைக்கும். மதத்தை பிடுங்கி மறைவாக வைத்துவிட்டு மனித மனங்களில் மரம் நடுக. கனிகள் விஷமாகாமல், புதிய ஆதாம் ஏவாள்  புசிக்கட்டும்!

 படைப்பு – வீர. கா . அருண்மொழித்தேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here