சைஃபுதீன்: எம்.சி.எம்.சி. டூவிட்டர் கணக்கு சிக்கலை தீர்க்க தகவல் தொடர்பு அமைச்சகம் வெளி உதவியை நாடலாம்

புத்ராஜெயா: மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனின் (எம்.சி.எம்.சி) அதிகாரப்பூர்வ டூவிட்டர் கணக்கில் அநாகரீகமான  டூவிட் வழக்கில் விசாரணையை முடிக்க தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகத்திற்கு (கே.கே.எம்.எம்) வெளி அதிகாரிகளின் உதவி தேவைப்படலாம் என்று அதன் அமைச்சர் டத்துக் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.

எம்.சி.எம்.சி.யின் உத்தியோகபூர்வ டூவிட்டர் கணக்கில் 2014 ஆம் ஆண்டு அநாகரீக கருத்து வழக்குகளை விசாரிப்பதற்கான குழு முழு விசாரணையை நடத்தியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சில நபர்கள் இப்பொழுது எம்.சி.எம்.சி.யில் பணியாற்றாததால் தடைகளை எதிர்கொண்டனர்.

நான் அறிக்கையைப் பார்த்தேன். குழு ஒரு விரிவான மற்றும் ஆழமான விசாரணையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சில நபர்கள் இனி எம்.சி.எம்.சி.குழுவிற்கு விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை.

எனவே இந்த பிரச்சினையை தீர்க்க அமைச்சகத்திற்கு வெளியே அதிகாரிகளிடம் உதவி கோருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ  முகமது மென்டெக்கிற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்று எம்சிஎம்சி ட்விட்டர் கணக்கு விசாரணையின் நிலை குறித்து கேட்டபோது அவர் கூறினார்.

இங்குள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் அமேசானுடன் நேற்று மெய்நிகர் புரிந்துணர்வு ஒப்பந்த அமர்வுக்குப் பின்னர் சைஃபுதீன் இதை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனவரி மாதம் எம்.சி.எம்.சியின் அதிகாரப்பூர்வ டூவிட்டர் கணக்கில் சில ஆபாச பதிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இது கணக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கட்டாயப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், எம்.சி.எம்.சி தலைவர் டாக்டர் ஃபத்லுல்லா சுஹைமி அப்துல் மாலேக், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தனது குழு முடித்துவிட்டதாகவும், அந்த அறிக்கை அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here