இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?

உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை  நாடான இந்தியா இன்று கொரோனாவில் முதலிடம் பிடித்திருக்கிறது. உலகப் பார்வை அனைத்தும் இன்று இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது.

இந்த கொரோனா அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து யுடியூப்பில் பியூஸ் மானாஸ் என்பவர் கூறியிருக்கும் கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

தற்பொழுது இந்திய அரசாங்கம் பொய் செய்தி பரப்புவரின் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. அப்படி என்றால் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்று கூறினால் சொத்து பறிமுதலா என்று பியூஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் கடந்த பிப்ரவரி வரை இந்தியா முழுவதும் 10,000 கொரோனா நோய்கள் மட்டுமே இருந்தனர். இன்னும் சற்று கவனத்துடன் இருந்திருந்தால் அக்கொடிய தொற்றை அடியோடு விரட்டி அடித்திருக்க முடியும்.

ஆனால் நாம் செய்தது என்ன? மகா சிவராத்திரியை கோலகலமாக கொண்டாடினோம். 2022ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பமேளாவை கும்மாளமாக கொண்டாடினோம். ஏறக்குறைய 28 லட்ச பேர் 4 மணி நேரத்தில் கங்கையில் நீராடி இருக்கின்றனர்.

இதை விட கொடுமை தேர்தல் பிரச்சாரம். லட்சக்கணக்கானோர் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது அப்பொழுது அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தலைவர்களுக்கோ தெரியவில்லை.

ஆனால் இன்று ஒரு நாளைக்கு 3 லட்சதிற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் 250 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் இருக்கின்றனர். ஆனால் வடமாநிலத்தில் 3,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேலாவது கட்சிகளும், தலைவர்களும் சுயநலத்தோடு சிந்திக்காமல் பொது நலமாக இருப்பார்களா என்பதே அனைத்து இந்தியர்களின் கேள்வி?

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here