– ஜெயின் அமைப்பினர் ஏற்பாடு
விழாவிற்கு ஜெயின் அமைப்பின் தலைவர் அனில் ஜெயின் தலைமை தாங்கி, பஸ்களில் ஆக்சிஜன் செயல்படும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
பின்னர் அனில் ஜெயின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூச்சுத்திணறலோடு அவசர சிகிச்சைக்காக வீடுகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் விதமாக சென்னையில் இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பஸ்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசல்களில் நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த வசதி தேவைப்படுபவர்கள் 94343 43430 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவோ, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்க முடியும். இதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு பஸ் மூலம் 6 ஆம்புலன்ஸ்களின் சேவையை அளிக்க முடிகிறது.
பஸ்களை கீதா வித்யா மந்திர் பள்ளி வழங்கி உள்ளது. இதனுடைய வரவேற்பை பொறுத்து சென்னை உட்பட மாநிலம் முழுவதும் முக்கியமான நகரங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நிறுத்தி பொதுமக்களுக்கு சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.