10ஆயிரம் வெள்ளி பட்டாசுகள் பறிமுதல்

கோலாலம்பூர்: கோவிட் -19 இணக்க கண்காணிப்பு கடமையில் ஒரு போலீஸ் குழு RM10,000 மதிப்புள்ள பட்டாசுகளுடன் ஒரு நபரை தடுத்து வைத்துள்ளனர்.

சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (மே 7) இரவு 11.20 மணியளவில் ஜலான் கெனங்கா அருகே தடுத்து நிறுத்தப்பட்டதாக டாங் வாங்கி ஒ.சி.பி.டி. உதவி  ஆணையர் முகமட் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

நாங்கள் அவரது காருக்குள் 99 பெட்டிகளின் பட்டாசுகளை பறிமுதல் செய்தோம். 50 வயது நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் விடுமுறை நாட்களில் கோலாலம்பூருக்குள் பட்டாசுகள் விற்பதற்காக என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சனிக்கிழமை (மே 8) தெரிவித்தார். சந்தேக நபரை தடுப்புக் காவலில் வைக்க  சனிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here