கோலாலம்பூர்: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக ஐந்தாம் படிவம் (எஸ்.பி.எம்) தேர்வில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த மாணவர்களின் நிலை குறித்து கேள்விகுறியாகி உள்ளது.
இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) காரணமாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பள்ளிகள் மீண்டும் மூடப்பட்ட நிலையில், இன்றுவரை தங்களது மிக முக்கியமான தேர்வுக்குத் தயாராவதற்கு போதுமான நேரம் கிடைக்குமா என்று அவர்களுக்குள் கேள்வி எழுந்திருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் ராயா விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றலுக்குத் திரும்பும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.









