சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 30 பில்லியன் ரிங்கிட் சமூக-பொருளாதார இழப்பு -அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தகவல்!

கோலாலம்பூர்:

நாட்டில் சாலை விபத்துகள் காரணமாக உற்பத்தித் திறன் இழப்பு, மருத்துவச் செலவுகள் குடும்பங்கள் மீதான தாக்கம் ஆகியவற்றால் ஆண்டுதோறும் சுமார் 30 பில்லியன் ரிங்கிட் சமூக-பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொது பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமீடி  தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும், சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்துள்ளனர், இது ஒன்றுக்கு சராசரியாக 18 உயிரிழப்புகளாகும்.

இதில் 80.6 சதவீத விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே காரணம் என்பது கவலைக்குரியது என்று சுட்டிக்காட்டிய அவர், விபத்துகள் நடந்த பிறகு சாலைகளைச் சீரமைப்பதை விட, மனிதத் தவறுகளைக் குறைக்கும் வகையில் பாதுகாப்பான சாலைகளை அமைப்பதிலும் பராமரிப்பதிலும் அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here