கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் சலுகை

அமல்படுத்தப்படாது!

கோலாலம்பூர்-
இன்று முதல் நாடு முழுவதும் எம்சிஓ 3.0 அமல்படுத்தப்பட்ட போதிலும் வங்கிக் கடனைத் திருப்பிச் ஙெ்லுத்துவதை ஒத்திவைக்கும் சலுகை இயல்பான முறையில் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று பேங்க் நெகாரா மலேசியா கவர்னர் டத்தோ நூர் ஸம்ஸியா முகமட் யூனுஸ் கூறினார்.

தேவைப்படக்கூடிய வாடிக்கையாளர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் உதவியை வங்கிகள் தொடர்ந்து வழங்கும் எனவும் இதன் மூலம் கடனாளிகளுக்கு உதவ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சுழ்நிலையில் அனைத்துக் கடனாளிகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் சலுகை இயல்பான முறையில் அமல்படுத்தும் நடவடிக்கை அமையாது என்று அவர் சொன்னார்.

ஏனெனில் கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான உதவியே கடனாளிகளுக்குத் தேவைப்படுகிறது. கடனாளிகளின் தேவைக்கேற்ப வங்கிகளில் இருந்து சரியான ஆலோசனைகளும் அவர்களுக்குத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே அனைத்துக் கடனாளிகளுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் சலுகையை இயல்பாக வழங்குவது தீர்வாக அமையாது.

கடனாளிகள் வங்கிகளுடன் தொடர்பு கொண்டு சரியான ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here