ஆலயங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை

பூசைகள் மட்டும் நடத்தலாம்

கோலாலம்பூர்–
நாடு முழுவதும் நேற்று தொடங்கி எம்சிஓ அமல்படுத்தப்பட்டதால் ஆலயங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை.

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்திருக்கிறது.

ஆலயங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் பின்னர் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் வழிபாடுகளுக்குத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெரிய ஆலயங்களில் 50 பேரும் சிறிய ஆலயங்களில் 20 பேரும் வழிபாட்டில் பங்கேற்கலாம். எஸ்ஓபி விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் சிறப்புப் பூசைகளும் நடத்தலாம். ஆனால், பெரிய அளவில் திருவிழா நடத்த முடியாது.

துணை பதிவதிகாரியைக் கொண்ட ஆலயமாக இருக்குமானால் பதிவுத் திருமணம் நடத்த அனுமதி உள்ளது.

இதில் 10 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here