மருத்துவமனையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு கொரோனா தொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.

உடல் நல பாதிப்பு காரணமாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தீவிரமாக செயல்படவில்லை. வாக்கு சேகரிப்புக்கு சென்ற போது மக்களை பார்த்து கை அசைத்தார். அமமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் களம் கண்டார். ஆனால் அந்தகூட்டணி படுதோல்வி அடைந்தது.

அதற்கு பிறகு அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு வந்தார் விஜயகாந்த். இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here